சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகளை கொண்டு சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் முதலிப்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் (34) உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.