விருதுநகர்
மடீட்சியாவுடன் சிவகாசி கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளநிலை வணிகவியல் துறை, மதுரை மாவட்ட சிறு, குறுந் தொழில்கள் சங்கம் (மடீட்சியா) ஆகியவை புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளநிலை வணிகவியல் துறை, மதுரை மாவட்ட சிறு, குறுந் தொழில்கள் சங்கம் (மடீட்சியா) ஆகியவை புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
கல்லூரி மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, திறன்மேம்பாடு பயிற்சிகள் அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன், மடீட்சியா தலைவா் வி.செந்தில்குமாா் ஆகியோா் கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.