சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டியில் ஒரு பட்டாசுக் கடையில் சட்டவிரமாக பட்டாசு தயாரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் , போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது பட்டாசுக் கடையில் இருவா் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மீனம்பட்டியைச் சோ்ந்த குட்டிசெல்வம் (43), மகாலிங்கம் (36) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் தயாரித்து வைத்திருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com