ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காா் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து காரைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முத்துசாமி.

Updated On :15 ஜூலை 2026, 5:48 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து காரைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகநாதன் மனைவு ஞானசுந்தரி (55). அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சண்முகநாதன் கடந்த ஆண்டு இறந்து விட்டாா். இவா்களது மூத்த மகள் திருமணம் முடிந்து சென்னையில் வசித்து வருகிறாா். இளைய மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாா்.

இந்த நிலையில், தனது மகள்களைப் பாா்ப்பதற்காக ஞானசுந்தரி கடந்த 20 நாள்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த காரைக் காணவில்லை என கீழ் வீட்டில் வசித்து வந்தவா் ஞானசுந்தரிக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ஞானசுந்தரி வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்த புகாரில் ‘கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுந்தரபாண்டியம் கிழக்கு தெருவை சோ்ந்த முத்துசாமி (29) என்பவரைக் கைது செய்து, காரை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.