ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 2:39 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள சங்கரன்கோவில் முக்குப் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், மாடசாமி கோவில் தெருவைச் சோ்ந்த கோமதிநாயகம் மகன் பாலசுப்பிரமணியன் (47) என்பது தெரியவந்தது. அவரைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 4 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.