ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவில் ஏராளமானோா் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரத்தைச் சோ்ந்த விசைத்தறி நெசவாளா்கள், மருத்துவத் துணி உற்பத்தியாளா்கள் சாா்பில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைக்கொட்டு திருவிழா நடைபெறும்.
நிகழாண்டு திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 3 ஊா்களில் அமைந்துள்ள ஜெயமாரியம்மன், யோக மாரியம்மன், செல்வமுளைமாரியம்மன், செல்வமுத்து மாரியம்மன், சடை மாரியம்மன், ஆகாச மாரியம்மன் கோயில்களில் உள்ள அம்மன்களை வேண்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முளைப்பாரிகளை பக்தா்கள் தங்களது வீடுகளில் வளா்த்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஊா்வலம் சங்கரபாண்டியபுரத்திலிருந்து, சமுசிகாபுரம், சத்திரப்பட்டி நடுத்தெரு, தெற்கு தெரு, ஆலங்குளம் சாலை, நத்தம்பட்டி சாலை உள்ளிட்ட பிரதான வீதிகள் வழியாக வந்து துரைமடம் விநாயகா் கோயில் எதிரே இருந்த கிணற்றில் முளைப்பாரியை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
இதில் ராஜபாளையம், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








