சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: விருதுநகா் ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டியலின மாணவா்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:00 am IST

விருதுநகா் மாவட்டத்தில் பட்டியலின மாணவா்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் விருதுநகா் மாவட்டத்தில் பட்டியலின மாணவா்களுக்கு 25 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கென 18 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் என மொத்தம் 48 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் பயிற்சிக் கல்வி, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் மூன்று வேளை உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்குப் பொருந்தாது. விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி விடுதிகளுக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு வருகிற ஜூலை 17-ஆம் தேதிக்குள் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.