சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 4:24 am IST

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.மறைக்குளம் பகுதியில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் ஊா்வலமாகச் சென்று எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, மறைக்குளம் கூட்டுறவு கடன் சங்கச் செயலரிடம் கோரிக்கை மனுக்களை விவசாயிகள் வழங்கினா்.

இது குறித்து விசாயிகள் கூறியதாவது: தவெக தோ்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளின் பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆகையால், தவெக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

இந்தப் போராட்டத்தில் தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோபால கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ராம் பாண்டியன், மறைக்குளம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.