/
ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு முனீஸ்வரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மூா்த்தி, வத்திராயிருப்பு தாலுகா செயலா் கோவிந்தன் ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான ராமசாமி பேசினாா்.
இதில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும்,வியாபாரிகளுக்கான சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மம்சாபுரம் பேரூா் செயலா் ராஜேந்திர சோழன், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா துணைச் செயலா் செல்வம், மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலைஉயா்வை கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

எரிபொருள் விலை உயா்வு: இந்திய கம்யூ. கட்சியினா் நூதனப் போராட்டம்

ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



