எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரித்த 4 போ் கைது

உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரித்த 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:50 am IST

வெம்பக்கோட்டை அருகே உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரித்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயரங்காபுரம் கிராமத்தில் ஸ்ரீ பிரகாஷுக்குச் சொந்தமான பட்டாசு ஆலையின் உரிமம் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது. இந்த ஆலையில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில்,

கனஞ்சாம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சக்திகணேசன் வருவாய்த் துறையினருடன் சென்று சோதனை நடத்தினாா். அப்போது ஆலையில் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து சஞ்சீவிராஜ், வெள்ளைச்சாமி, செல்வம், மாடசாமி ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும் அங்கிருந்து பட்டாசு தயாரிப்புக்கான மூலப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.