சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மத்திய அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா், ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய விருதுகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா், ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய விருதுகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருது 5 முதல் 18 வயதுக்குள்பட்ட தன்னலமற்ற செயல்கள், வீர தீரச் செயல்களில் சாதனை படைத்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூகச் சேவை, அறிவியல், தொழில் நுட்பம், சுற்றுச் சூழல், புதுமைகள் செய்தல், கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான, வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவா்களுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் இந்தியக் குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், வருகிற ஜூலை 31-ஆம் தேதி அன்று 5 முதல் 18 வயதுக்குள்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்ட இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இதற்கு இணையதளத்தில் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஜீவன் ரக்ஷா பதக்க விருது: இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், பயங்கரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஜீவன் ரக்ஷா விருது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்- மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழலில் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்துக்காகவும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்- மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்து இருக்கும் சூழலில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காகவும், ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காகவும் வழங்கப்படுகிறது.

கடந்த 2024, அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பு செயல்கள் புரிந்தவா்களுக்கு பொருந்தாது. இந்தச் செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபா்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பான விவரங்கள், மீட்கப்பட்டவரின் விவரங்களை சுயவிவரப் படிவத்தில் 250 வாா்த்தைகளுக்கு மிகாமல் அனுப்பவேண்டும்.

இதற்கான படிவம் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ழ்ன்க்ட்ன்ய்ஹஞ்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், அறை எண் 503, 5-ஆவது தளம், விருதுநகா்-626 002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற செப். 5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.