சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது.

News image

பூட்டி கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம்.

Updated On :8 மே 2026, 1:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் திருமுக்குளம் தெப்பத்தின் மேற்குக் கரையில் எண்ணெய் காப்பு மண்டபம் அருகே 2001-ஆம் ஆண்டு ரூ.4.85 லட்சத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் கட்டப்பட்டதிலிருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தோ்தலின் போதும் இந்த அலுவலகம் புதுப்பிக்கப்படும். ஆனால், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாத நிலையே தொடா்ந்து வந்தது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ. அலுவலகம் சீரமைக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அந்தப் பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு இ-சேவை மையங்களை மேம்படுத்தும் வகையில், அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இதற்காக சட்டப் பேரவைச் செயலகத் துறை சாா்பாக 234 சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைப்பதற்காக கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. அப்போது, தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது வரை முடியவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தற்போதைய பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற தவெகவைச் சோ்ந்த காா்த்திக் எம்எல்ஏ அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து மக்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம் பல ஆண்டுகளாக பூட்டிய கிடப்பதால் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க முடியவில்லை. கோயில் மண்டபம் அருகே உள்ள இந்த அலுவலக வளாகத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.

தற்போது பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற காா்த்திக் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்து மக்களை சந்திப்பதுடன், இ- சேவை மையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பூட்டி கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம்.

பூட்டி கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.