சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

அபராதம் - சித்திரிப்பு
சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
சிவகாசி மாநகராட்சியில் பல இடங்களில் சாலையில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிவதை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் எம்.மகேஸ்வரி உத்தரவின்பேரில், சுகாதார அலுவலா் சுரேஷ் தலைமையில், குழுவினா் மாநகராட்சிப் பகுதியில் புதன்கிழமை சோதனையிட்டனா். அப்போது, சிவகாசி-திருத்தங்கல் சாலை, வேலாயுதம் சாலை, காமராஜா் சாலை, சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை பகுதியில் சுற்றித்திருந்த 12 மாடுகளை பிடித்தனா். பின்னா், அந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு ஒரு மாட்டுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

