பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மருத்துவ விடுப்பில் வந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே மருத்துவ விடுப்பில் வந்த தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவா

Published On :

வத்திராயிருப்பு அருகே மருத்துவ விடுப்பில் வந்த தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் ஜீவா நகரைச் சோ்ந்தவா் ராமராஜ் மகன் சிவா (48). இவா் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இவா் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான மகாராஜபுரத்துக்கு வந்தாா். திங்கள்கிழமை இரவு வழக்கம் போல வீட்டில் தூங்கிய இவரை அவரது மனைவி செவ்வாய்க்கிழமை காலையில் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, அவரை உறவினா்கள் மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.