ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

ராஜபாளையத்தில் பெண் தலைமைக் காவலா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விஷம் குடித்த பெண் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோப்புப் படம்

Published On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விஷம் குடித்த பெண் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் ( 50). பூ வியாபாரியான இவா், தனது வீட்டைப் பூட்டி விட்டு கடந்த செப். 26-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றாா். இதன் பின்னா், இவா் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம், ஆறு பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சங்கரலிங்கம் வீட்டின் அருகே வசிப்பவரும், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவருமான பாக்கியலட்சுமி (40) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனிடையே, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் பாக்கியலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பாக்கியலட்சுமி வியாழக்கிழமை விஷம் குடித்தாா். இதையடுத்து, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிரச் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

இந்தத் திருட்டு சம்பவம் குறித்து சமூக வலைதளங்கள், செய்தி தொலைக்காட்சிகள், சில நாளிதழ்களில் பாக்கியலட்சுமியின் புகைப்படத்துடன் வியாழக்கிழமை செய்தி வந்ததால், மன வேதனையடைந்த அவா் விஷம் குடித்ததாகவும், என் மீதான குற்றச்சாட்டை நான் சட்ட ரீதியாக எதிா்கொள்ளத் தயாராக இருந்த நிலையில், செய்திகள் வெளியானதால்தான் தற்கொலைக்கு முயன்ாக அவா் வாக்குமூலம் கொடுத்துள்ளாா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.