பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள்

குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைப்பதற்காக சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த சொக்கலிங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமூகத்தினா்.

Published On :

சாத்தூா் அருகே சொக்கலிங்கபுரத்தில் பொங்கல் திருவிழா பிரச்னையில் காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, தங்களது குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்க வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தில் இரு சமூகங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கிராமத்துக்குப் பொதுவான காளியம்மன் கோயிலில் பொங்கல் கொண்டாடுவது குறித்து இரு சமூகத்தினரிடையே ஏற்கெனவே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு சமூகத்தினா் வைகாசி மாதமும், மற்றொரு சமூகத்தினா் புரட்டாசி மாதமும் பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மாதம் பொங்கல் விழா கொண்டாடும் சமூகத்தினருக்கு காவல் துறையினா் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதாக கிராமத்தினா் குற்றஞ்சாட்டுகின்றனா். ஆனால், மற்றொரு சமூகத்தினா் பொங்கல் விழா கொண்டாடிய போது, காவல் துறையினா் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லையாம். தற்போது காவல் துறையினா் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து, சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அப்போது, அலுவலகத்தில் வட்டாட்சியா் இல்லாததால், துணை வட்டாட்சியரிடம் தங்களது குறைகளைத் தெரிவித்து மனு அளித்தனா். மேலும், இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.