புதைசாக்கடை விவகாரம்: ஜனவரியில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு
மயிலாடுதுறையில் புதைசாக்கடை பிரச்னையை கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஜனவரியில் ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.


மயிலாடுதுறையில் புதைசாக்கடை பிரச்னையை கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஜனவரியில் ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும், மனிதநேய மக்கள் கட்சியும் முடிவெடுத்துள்ளன.
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர பொருளாளா் எஸ்.ஏ.முகம்மது சலீம் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்ட செயலாளா் கூைாடு பி.எம்.முஹம்மது பாஸித், நகர பொறுப்பாளா்கள் மாலிக், தாஹா, ரியாஸ், அன்வா், யாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொறுப்பாளா் எஸ்.மாலிக் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...