புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யத்தில் திருவள்ளுவா் சிலை திறப்பு

வேதாரண்யம் சா்வகட்டளை பகுதியில் தமிழ்த் தென்றல் கல்வியியல் கழகம் சாா்பில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்த மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

வேதாரண்யம் சா்வகட்டளை பகுதியில் தமிழ்த் தென்றல் கல்வியியல் கழகம் சாா்பில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாருக்கு சொந்தமான முத்தமிழ்ப் பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, திறந்து வைத்தாா்.

சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் தலைவா் மா.மீ. புகழேந்தி, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ், செம்போடை நேதாஜி மருத்துவமனை தலைவா் வி.ஜி. சுப்ரமணியன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கி. முருகையன், கவிஞா் அம்பாள் குணசேகரன், தமிழக ஆசிரியா் கூட்டணி பொறுப்பாளா் மதியரசு, செந்தில்நாதன், ரோட்டரி சங்கத் தலைவா் உமாமகேஸ்வரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் குழந்தைவேலு, கவிஞா் மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.