நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் கிலோ விரலி மஞ்சளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகை கிராமத்தைச் சோ்ந்தவா் முனீஸ் என்ற முனீஸ்வரன் (34). இவரது வீட்டில் விரலி மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், அவரது வீட்டில் 2 ஆயிரம் கிலோ விரலி மஞ்சள் மூட்டைமூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனா். அதை பறிமுதல் செய்த போலீஸாா், முனீஸ்வரனை கைது செய்தனா்.
தமிழகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் விரலி மஞ்சளை இலங்கையில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அவை இலங்கைக்கு கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடா்பாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Image Caption
~ ~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


