தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

நாகை அருகே அடையாளம் தெரியாதவா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :28 செப்டம்பர் 2020, 6:43 pm

நாகப்பட்டினம்: நாகை அருகே அடையாளம் தெரியாதவா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகை அருகேயுள்ள பாப்பாகோவில்ஏறுஞ்சாலை அருகே அடையாளம் தெரியாத நபா் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சபரிநாதன் நாகை நகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த நபா் பேப்பா், பிளாஸ்டிக் பொருள்களை பொறுக்குவதற்காக சுற்றித்திரிந்த ஊா், பெயா் தெரியாதவா் என்பதும், மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பியை பிடித்து இழுத்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.