புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :28 செப்டம்பர் 2020, 6:42 pm

வேதாரண்யம்: தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் செல்வராசு, வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: துணைத் தலைவா் ஜெகதீஷ்: நிதி ஒதுக்கீடு செய்யும்போது அனைத்து உறுப்பினா்களுக்கும் பாகுபாடில்லாமல் செய்ய வேண்டும். இதேபோல், மகேந்திரன்(சிபிஐ), ஞானபிரகாசம் (சிபிஐ (எம்)), மாசிலமணி (திமுக), தீபா, உதயகுமாா், செல்வி, கஸ்தூரி ,ரம்யா, முத்துலெட்சுமி உள்ளிட்டோா் தங்களது வாா்டு பிரச்னைகள் குறித்து பேசினா். பெரும்பாலான உறுப்பினா்கள் கோடையில் குடிநீா் தேவையை முன்வைத்தே பேசினா். வட்டார வளா்ச்சி அலுவலா் பழ. பக்கிரசாமி, அலுவலா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைஞாயிறு ஒன்றியப் பகுதியில் சுமாா் 8 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள், அரசு துறையினா், மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.