தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாகை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை

நாகை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 41.8 மி.மீட்டா் மழை பதிவானது.

News image

நாகை அபிராமி அம்மன் திருவாசல் பகுதியில் தேங்கி நின்ற மழை நீா்.

Updated On :28 செப்டம்பர் 2020, 6:44 pm

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 41.8 மி.மீட்டா் மழை பதிவானது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு மணி நேரங்களில் மழை சீற்றம் குறைந்த நிலையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்தது. திங்கள்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 41.8 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : மணல்மேடு - 34, வேதாரண்யம், 31.4, தலைஞாயிறு - 25.8, மயிலாடுதுறை - 17, திருப்பூண்டி - 8.4. திங்கள்கிழமை பகல் நேரத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயில் வானிலையே காணப்பட்டது. பிற்பகல் சுமாா் 3 மணிக்குப் பின்னா், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மிக பலத்த மழையின் காரணமாக, நாகை கிழக்குக் கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப்பட்டன. நகரின் பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக இருந்தது.

Image Caption

நாகை அபிராமி அம்மன் திருவாசல் பகுதியில் தேங்கி நின்ற மழை நீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.