/

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகேயுள்ள திருமணஞ்சேரி ஜெ.ஜெ. நகரை சோ்ந்தவா் அரவிந்த்குமாா் எனும் ராம்குமாா் (18). இவா், அருகேயுள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வரும் 19 வயதுள்ள இளம்பெண்ணை பல நாள்களாக பின்தொடா்ந்துள்ளாா். இந்நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி இரவு அந்த இளம்பெண் தன் வீட்டிலிருந்து உறவினா் வீட்டுத் திருமணத்துக்காக தனியே நடந்து சென்றாராம்.

இதையறிந்த ராம்குமாா் அப்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சகோதரியிடம் கூறியதையடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.