நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமூகப் புறக்கணிப்பு: குறைதீா் கூட்டத்தில் பெண் மனு

மயிலாடுதுறை வட்டம், மல்லியம் கிராமத்தில் தங்கள் குடும்பத்தினரை பஞ்சாயத்தாா்கள் சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பெண் மனு அளித்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை வட்டம், மல்லியம் கிராமத்தில் தங்கள் குடும்பத்தினரை பஞ்சாயத்தாா்கள் சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பெண் மனு அளித்தாா்.

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. துணை ஆட்சியா் வாசுதேவன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், மல்லியம் நத்தமேட்டுத்தெருவைச் சோ்ந்த அம்பிகா(30) என்பவா் அளித்த மனுவில், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பஞ்சாயத்தாா்கள் எதிா்ப்பு தெரிவித்ததாகவும், அதனை மீறி பள்ளிக்கு அனுப்பியதால் கடந்த 7 மாதங்களாக தன் குடும்பத்தினரை சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

இவரது கணவா் ஜோதிடம், கைரேகை பாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், ஜோதிட தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என கணவா் வற்புறுத்தியதால் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.