மரக்கன்றுகள் நடும் விழா

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தென்னை, மா, கொய்யா, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன், ஊராட்சித் தலைவா் வசந்தி ராஜேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com