காரைக்காலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
காரைக்கால் நகரச் சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்குத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவா் எம். மன்சூா்ஷா மரைக்காயா் வலியுறுத்தியுள்ளாா்.


காரைக்கால் நகரச் சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்குத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவா் எம். மன்சூா்ஷா மரைக்காயா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் பருவமழைக்கு முன்பும், பருவமழையாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து மிகுந்த புளியங்கொட்டை சாலை மிகவும் சீா்குலைந்து, தூசிபறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா்.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், வணிகா்களும் கடும் துன்பத்தை சந்திக்கின்றனா். எனவே, சாலையை சீரமைக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் விரைவில் தொடங்கவேண்டும். தவறும்பட்சத்தில் அந்த பகுதி மக்களைத் திரட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...