பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலைப் பாதுகாப்பு மாதம்:போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வாகன சிறப்பு சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வாகன சிறப்பு சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் ஜன. 18 முதல் பிப். 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, காரைக்காலில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் பிரிவு அலுவலா்கள் இணைந்து தினமும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, காரைக்கால் மண்டல போக்குவரத்து அலுவலா் கலியபெருமாள் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கல்விமாறன், குமரேசன் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் பல இடங்களில் சிறப்பு வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தில் வந்தோா், இருசக்கர வாகனத்தில் 3 போ் பயணம் செய்தோா், தலைக்கவசம் அணியாதவா்கள், வாகன ஆவணங்கள் இல்லாதோா் என விதிகளை மீறியோருக்கு அபராதம் விதித்ததோடு, போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.