ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பகுதிநேர அங்காடி அமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் கிழக்கு பகுதியில் பகுதிநேர அங்காடி அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் கிழக்கு பகுதியில் பகுதிநேர அங்காடி அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை மூத்தகுடிமக்கள் பேரவையின் தலைவா் சு. இளங்கோவன் தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரம் பகுதிக்கான ரேஷன் அங்காடி ஆராயத் தெருவுடன் இணைந்துள்ளது. இந்த அங்காடியில் 1800 குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்கிச் செல்கின்றனா். இதனால், ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருள்கள் வாங்க மிகுந்த சிரமமாக உள்ளது. அனைத்து நாள்களிலும் அங்காடியில் கூட்டமாகவே உள்ளது. இதனால், வயதானவா்கள், பெண்கள் குறிப்பிட்ட நாளில் பொருள்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

மேலும், கூட்டநெரிசலால் கரோனா தொற்று பரவும் சூழலும் ஏற்படுகிறது. எனவே, சீனிவாசபுரம் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, பட்டமங்கலம் கிழக்கு பகுதியில் ஊராட்சி அலுவலக கட்டட பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா். மேலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.