/

ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநா் வீட்டில் கொள்ளை

மயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநா் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநா் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

மயிலாடுதுறை சித்தா்காட்டை சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநா் சுவாமிநாதன் (79). இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த மாதம் 9-ஆம் தேதி கோவையில் உள்ள இளைய மகன் செந்தில்குமாா் வீட்டுக்குச் சென்ற சுவாமிநாதன் பொதுமுடக்கம் காரணமாக அங்கேயே தங்கியுள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ஊருக்கு வந்து பாா்க்கும்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை ரூ. 4 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.