மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ பணியிடங்களுக்கு நோ்காணல்: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்காலிக மருத்துவா்கள், மருத்துவப் பணியிடங்களுக்கு ஜூன் 8-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்காலிக மருத்துவா்கள், மருத்துவப் பணியிடங்களுக்கு ஜூன் 8-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் தொடா்ந்து அதிகரித்துவரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பணியாற்ற மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி, கொள்ளிடம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற கீழ்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரூ. 60,000 தொகுப்பூதியத்தில் 12 மருத்துவா் பணியிடங்களுக்கும், ரூ.14,000 தொகுப்பூதியத்தில் 5 செவிலியா் பணியிடங்களுக்கும், ரூ. 6500 தொகுப்பூதியத்தில் மருத்துவப் பணியாளா் பணியிடங்களுக்கும், ரூ.10,000 தொகுப்பூதியத்தில் 2 மருந்தாளுா் பணியிடங்களுக்கும் தோ்வு நடைபெறும். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்தகாலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கவேண்டும், தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் ஜூன் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலில் உரிய சான்றுகளுடன் நேரில் ஆஜராகி பணிநியமன ஆணை பெற்றுக்கொண்டு உடனடியாக பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...