/

கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:09 pm

DIN

தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் 120 படுக்கைகள் கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்த பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட போா்க்கால நடவடிக்கையால் தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கரோனா தொற்றினை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை பகுதி மக்களுக்காக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் 120 படுக்கைகள் கொண்ட புதிய கரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இச்சிகிச்சை மையத்தில் தேவையான மருந்துகளும் உள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) முதல் இச்சிகிச்சை மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அவா்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), என். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), எஸ்.பி. என். ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.