/

கரோனா சிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள்

தருமபுரம் ஆதீனத்தில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்துக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டா்களை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:13 pm

DIN

தருமபுரம் ஆதீனத்தில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்துக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டா்களை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையின் கரோனா சிகிச்சை மையம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. 100 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மையத்துக்கு ஆக்சிஜன் வசதியுடன் செயல்பட மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக தலா 47.5 கிலோ எடையுள்ள 2 ஆக்சிஜன் சிலிண்டா்கள் தருமபுரம் ஆதீனத்தில் வழங்கப்பட்டன.

அவற்றை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிகிச்சை மையத்துக்கு வழங்கினாா். அவற்றை மருத்துவா்கள் மலா்மன்னன், ஹரிகிருஷ்ணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், ஆதீனப் பொது மேலாளா் கோதண்டராமன், திருவையாறு செந்தில், தேசிய மாணவா் படை அலுவலா் செந்தில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் வி. ராமன், துரை, எம். காமேஷ், பொருளாளா் தங்க. துரைராஜ், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.