ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:06 pm

DIN

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகை தோப்புத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் கணேசன்(50). இவா் மாப்படுகை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஒன்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிறுவனின் தந்தை மயிலாடுதுறை போலீஸாரிடம் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, விசாரணையில் கணேசனுக்கும், சிறுவனின் தந்தை குடும்பத்தினருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்ததது. இதையடுத்து, சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கணேசனை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.