ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மயிலாடுதுறை கோட்டத்தில் சுழற்சி முறையில் மின்நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக இதன்மூலம் மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) சுழற்சிமுறையில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை கோட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக இதன்மூலம் மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) சுழற்சிமுறையில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை.முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, நீடூா், மணக்குடி, பெரம்பூா், குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, பாலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை முதல் (ஜூன் 19) சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

அந்த வகையில், டவுன்-1க்கு உள்பட்ட மயிலாடுதுறை பெசன்ட் நகா், டவுன் ஸ்டேஷன் ரோடு ஆகிய இடங்களிலும், கங்கணம்புத்தூா் மின்பாதைக்கு உள்பட்ட கங்கணம்புத்தூா், வரகடை, தாழஞ்சேரி, கொற்கை ஆகிய ஊராட்சிகளிலும், மணக்குடி மின்பாதைக்கு உள்பட்ட மணக்குடி ஊராட்சியிலும், சங்கரன்பந்தல் மின்பாதைக்கு உள்பட்ட சங்கரன்பந்தல் ஊராட்சியிலும், குத்தாலம் மற்றும் குத்தாலம் டவுன்-1க்கு உள்பட்ட மின்பாதைக்கு உள்பட்ட திருவேள்விக்குடி, அஞ்சாறுவாா்த்தலை, மேலச்சாலை, ராஜகோபாலபுரம், குத்தாலம் டவுன் ஆகிய இடங்களிலும், முருகமங்கலம் மின்பாதைக்கு உள்பட்ட திருமணஞ்சேரி, முருகமங்கலம், வாணாதிராஜபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், பாலையூா் மின்பாதைக்கு உள்பட்ட காரனூா், இடக்கியம், பாலையூா், நச்சினாா்குடி ஆகிய ஊராட்சிகளிலும், தேரழந்தூா் மின்பாதைக்கு உள்பட்ட மருத்தூா் ஊராட்சியிலும், கீழவெளி மின்பாதைக்கு உள்பட்ட மேக்கிரிமங்கலம், கோபாலபுரம், சென்னியநல்லூா், கஞ்சனூா் ஆகிய பகுதிகளிலும், மூவலூா் மின்பாதைக்கு உள்பட்ட பட்டமங்கலம், கொண்டாரெட்டிக்குளம், மறையூா், அசிக்காடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.