ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கோயில் பூசாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள்

மயிலாடுதுறையில் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியா்கள் 150 பேருக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் நிவாரண பொருள்களை ஸ்ரீமத் விமூா்த்தானந்தா் சுவாமிகள் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியா்கள் 150 பேருக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் நிவாரண பொருள்களை ஸ்ரீமத் விமூா்த்தானந்தா் சுவாமிகள் வியாழக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை குருமூா்த்தி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயில் பூசாரிகள் 150 பேருக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் விமூா்த்தானந்தா் சுவாமிகள் அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கி அருளாசி கூறினாா். நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத்தலைவா் வாஞ்சிநாதன், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி.செந்தில்வேல், ஹிந்து கலாசார ஸமிதி பூஜாரிகள் பேரமைப்பின் மாநில செயலாளா் நாகராஜன், மாவட்ட தலைவா் சண்முகம், மாவட்ட செயலாளா் மதிச்செல்வன், மாவட்ட பொருளாளா் பட்டாபி, ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநில பொறுப்பாளா் திருவாரூா் வேல்மயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.