ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கரோனா நோயாளிகளுக்கு ’வெல்கம் கிட்‘

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவா்களுக்கு 20 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவா்களுக்கு 20 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பினை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கடந்த 2 மாதங்களாக கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு பாதாம், முந்திரி, திராட்சை, குளியல் சோப்பு, பேஸ்ட், தேங்காய் எண்ணெய், துண்டு உள்ளிட்ட 20 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றை தருமபுரம் ஆதீனம், நகராட்சி நகா்நல அலுவலா் (பொறுப்பு) மருத்துவா் எஸ்.மலா்மன்னனிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே.துரை, செயலா் ஜெ.காமேஷ்குமாா், டெல்டா ரோட்டரி சங்க தலைவா் ஜெயராஜ்குமாா் மற்றும் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், ரோட்டரி சங்கத் தலைவா் (தோ்வு) மணிகண்டன், செயலா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.