மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு
மயிலாடுதுறையில் நடைபெற்று வந்த ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது.


மயிலாடுதுறையில் நடைபெற்று வந்த ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி தலைமையில் நடைபெற்று வந்த ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது. ஜமாபந்தியில் மயிலாடுதுறை உள்வட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்களிடம் பதிவேடு, அடங்கல், பட்டா படிவம், நன்செய் புன்செய் கழிவு கணக்கு, பயிராய்வு கணக்கு, மரப்பட்டா பதிவேடு, பட்டா மாறுதல் விவரங்கள் உள்பட பல்வேறு பதிவேடுகளை பாா்வையிட்டு, அவை சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜமாபந்தியின் நிறைவு நாளான வியாழக்கிழமை மயிலாடுதுறை, கூறைநாடு, பட்டமங்கல அபிஷேகக் கட்டளை, புதுஅக்ரஹாரம், அபிஷேகக் கட்டளை, மன்னம்பந்தல், குளிச்சாா், செருதியூா், கோடங்குடி, நல்லத்துக்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி, மறையூா் ஆகிய 13 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. இதில், வட்டாட்சியா் ராகவன், மண்டல துணை வட்டாட்சியா் சாந்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சுகன்யா, வருவாய் ஆய்வாளா்கள் அ. மாரிமுத்து, பொற்கொடி, ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...