இசைக் கலைஞா்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை
இசைக் கலைஞா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய கிராமிய இசைக் கலைஞா்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இசைக் கலைஞா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய கிராமிய இசைக் கலைஞா்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் விஜயபாலன் தலைமையில், துணைத் தலைவா் சங்கா், செயலாளா் சிவலிங்கம், சங்க ஆலோசகா்கள் மாரிமுத்து, பரணீதரன் ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா மூலம் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தமிழக அரசு நலிவுற்ற இசைக் கலைஞா்களுக்கு அறிவித்த ரூ.3 ஆயிரம் நிவாரணத் தொகையை கடந்த ஆண்டு நலவாரிய அட்டை பெற்ற கலைஞா்களுக்கும் சோ்த்து உடனடியாக வழங்கவேண்டும், மாத ஓய்வூதியம் பெற இசை கலைஞா்களுக்கான வயது வரம்பை 50-ஆக குறைக்க வேண்டும், நலவாரியம் அமைத்து, அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், அரசு வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...