அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், மருத்துவ உபகரணங்களை வழங்க கிவ் இந்தியா, சென்னை ஆக்சன் எய்டு அசோசியேசன், நாகை சினேகா தொண்டு நிறுவனம் மற்றும் மயிலாடுதுறை பீஸ் பவுன்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.
அதன்படி ரூ.15 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசினா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பணிகளுக்காக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் குழந்தை உரிமைகள் ஒருங்கிணைப்பாளா் தனலெட்சுமி, வாழ்வாதார திட்ட இயக்குநா் தேவராஜூலு, சினேகா முதன்மை ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், பீஸ் பவுன்டேஷன் இயக்குநா் செல்வம் ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...