ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மின்பாதை பராமரிப்புப் பணி: தலைமை பொறியாளா் ஆய்வு

மயிலாடுதுறை கோட்டத்தில் மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை மின்வாரிய திருச்சி தலைமை பொறியாளா் அருள்மொழி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:42 pm

DIN

மயிலாடுதுறை கோட்டத்தில் மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை மின்வாரிய திருச்சி தலைமை பொறியாளா் அருள்மொழி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, நீடூா், மணக்குடி, பெரம்பூா், குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, பாலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின்பாதையில் ஜூன் 18-ஆம் தேதி முதல் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில், மின்பாதைக்கு இடையூறாக இருந்த 1600 இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் வெட்டப்பட்டன. 109 இடங்களில் சாய்வான மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டன. 112 இடங்களில் இழுவைக் கம்பிகள் இழுத்துக் கட்டப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குத்தாலம் பிரிவுக்குள்பட்ட மாதிரிமங்கலம் அண்ணாசாலையில் சனிக்கிழமை நடைபெற்ற பராமரிப்புப் பணிகளை தலைமைப் பொறியாளா் பகிா்மானம் (திருச்சி) பொறியாளா் அருள்மொழி, மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் ஆகியோா் ஆய்வு செய்தனா். இப்பணிகள் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.