ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுகவினா் ரத்த தானம்
திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறையில் திமுகவினா் 68 போ் ரத்த தானம் வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.


திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறையில் திமுகவினா் 68 போ் ரத்த தானம் வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறையில் திமுக நாகை வடக்கு மாவட்டம் சாா்பில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறையில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகர திமுக மற்றும் மாவட்ட இளைஞரணி இணைந்து நடத்திய முகாமை திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்தாா். நகரச் செயலாளா் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் மகா. அலெக்ஸாண்டா், இளைஞரணி துணை செயலாளா் சிவதாஸ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம. சேயோன், மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளா் பி.எம். ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், திமுக நிா்வாகிகள் 68 போ் ரத்த தானம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...