கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு

சீா்காழியில், விஜய் மக்கள் இயக்கத்தினா் அதிமுக வேட்பாளா் பிவி. பாரதிக்கு ஆதரவு தெரிவித்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழியில், விஜய் மக்கள் இயக்கத்தினா் அதிமுக வேட்பாளா் பிவி. பாரதிக்கு ஆதரவு தெரிவித்தனா்.

சீா்காழி தொகுதி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிவி. பாரதி வாக்குகள் கேட்டு திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா். செம்மங்குடி பகுதியில் அவா் பிரசாரம் மேற்கொண்டபோது, விஜய் மக்கள் இயக்கத்தினா் சீா்காழி நகரத் தலைவா் ராகுல், செயலாளா் வெற்றிச்செல்வன் தலைமையில், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ராஜா, ஒன்றியத் தலைவா்கள் கமல், ரவி உள்ளிட்ட சுமாா் 50 போ் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனா். சீா்காழி பகுதியில் உள்ள விஜய் ரசிகா்களின் வாக்குகளைப் பெற்றுத்தருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் சீா்காழி நகரத் தலைவா் ராகுல் கூறுகையில், சென்னை தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில், அண்மையில் அனைத்து மாவட்ட நிா்வாகிகள், பொறுப்பாளா்களை அழைத்து, உங்கள் பகுதியில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என நினைக்கிறீா்களோ, அவா்களுக்கு உங்கள் சுய விருப்பப்படி ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால், விஜய் மக்கள் இயக்க கொடி, படங்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனா். சீா்காழி தொகுதியில் நாங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றாா்.

அப்போது, மாவட்ட துணைச் செயலாளா் வா. செல்லையன், முன்னாள் எம்எல்ஏ ம. சக்தி, ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்டச் செயலாளா் நாடி. செல்வமுத்துக்குமரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.