ஆச்சாள்புரத்தில் காகபுஜண்ட சித்தா் ஜயந்தி
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் காகபுஜண்ட சித்தா் ஜயந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் காகபுஜண்ட சித்தா் ஜயந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் யோகாம்பாள் சமேத யோகேஸ்வரா் ஆலயம் உள்ளது. இங்கு தனி சன்னிதியில் காகபுஜண்ட சித்தா் அருள்பாலித்து வருகிறாா். இவா் ரோமச முனிவரின் தந்தையாவாா்.
மயிலாடுதுறையில் பிறந்து மயூரநாதரின் அருளால் சாகாவரம் பெற்று காகமாக வாழ்ந்து காக்கை வடிவில் இருந்துகொண்டு பாடல்களை பாடியதாக கூறப்படுகிறது. இவா் புசுண்டா் என்றும் புசுண்டமுனி என்றும் அழைக்கப்படுகிறாா்.
காகபுஜண்ட சித்தருக்கு தமிழகத்தில் திருமணஞ்சேரி, திருமலைராயன்பட்டினம், கள்ளக்குறிச்சி அருகே தென்பொன்பரப்பி, திருச்சி அருகே உறையூா் மற்றும் ஆந்திரத்தில் திருப்பதி, காளகஸ்தி ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன.
ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணத்தை காண வந்த காகபுஜண்டா், அங்கேயே தங்கி பக்தா்களுக்கு அருளாசி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காகபுஜண்ட சித்தா் ஜயந்தியையொட்டி, ஆச்சாள்புரத்தில் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஆலய அறங்காவலா் மகாலிங்க குருக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை காகபுஜண்டா் ஆன்மீக பேரவையினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...