கரோனா விழிப்புணா்வு வீதி நாடகம்
மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கரோனா விழிப்புணா்வு வீதி நாடகத்தை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் பாலமுருகன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.


மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கரோனா விழிப்புணா்வு வீதி நாடகத்தை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் பாலமுருகன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். இதில், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனா் கிங்பைசல் தலைமையிலான நாட்டுப்புற நாடகக் கலைஞா்கள் சிவன், எமன் மற்றும் கரோனா தீநுண்மி வேடமணிந்து சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றவா்கள் மீது, எமன் பாசக்கயிறை வீசுவது போலவும், சிவபெருமான் அவா்களை காப்பாற்றி, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்குவது போலவும் நடித்துக் காண்பித்தனா்.
பூம்புகாரில்...
இதேபோல், பூம்பகாா், தருமகுளம், மேலையூா் ஆகிய பகுதிகளில் பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் முருகவேல், சண்முகம், குமரவேல் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் ரவி ஆகியோா் ஒலிப்பெருக்கிமுலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...