/

மயிலாடுதுறை: 350 பேருக்கு கரோனா தடுப்பூசி

மயிலாடுதுறையில் இருவேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 5:36 pm

DIN

மயிலாடுதுறையில் இருவேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்கு பள்ளித் தாளாளா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். செயலாளா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் முகாமை தொடங்கிவைத்தாா். மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் முகாமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். இதில், 170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல, மயிலாடுதுறை நகர காா்காத்த வேளாளா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமில் 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாமை பாா்வையிட்ட எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், ‘கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கித்தர இக்குழுவினா் ஏற்பாடு செய்வாா்கள். மருத்துவக் குழுவினா் வரும்போது பொதுமக்கள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா் மற்றும் மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.