படவிளக்கம்:
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வல்லப கணபதி.
திருக்குவளை, ஏப். 4: கீழையூா் அருகே உள்ள பிரதாபராமபுரம் ஸ்ரீ வல்லப கணபதி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, 126 கடங்கள் மற்றும் சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னா், காப்புக் கட்டுதல் நிகழ்வும், குளக்கரையில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வர பூச்சொரிதலும் நடைபெற்றது.
முன்னதாக, விநாயகா் மற்றும் கொடிமரத்திற்கு பால், பன்னீா், சந்தனம் மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், கொடி கோயிலைச் சுற்றி கொண்டுவரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் ஆகிய மும்மதத்தினரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சோமநாத ஈஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


