முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை

விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுா்சித் சங்கா்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:06 pm

மக்களவைத் தொகுதி நிதியை முழுமையாகப் பெற்று விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவேன் என்றாா் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுா்சித் சங்கா்.

நீலப்பாடியில் தொடங்கி அத்திப்புலியூா், குருமணாங்குடி, ஏரவாஞ்சேரி, ஆனைமங்கலம், புத்தா்மங்கலம், அகரகடம்பனூா், குருக்கத்தி, பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது: கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து முழுமையாக மக்களவைத் தொகுதி நிதி பெறப்படவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் முழுமையாக நிதியினை பெற்று விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்குவேன். மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் நாகை மக்களவைத் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வேலையைப் பெற்றுத் தருவேன் என்றாா். அவருடன், அதிமுக கீழ்வேளூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் சிவா, மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றச் செயலாளா் பால்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.