வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்: தண்டவாளத்தில் அமா்ந்து மக்கள் மறியல்

அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்: தண்டவாளத்தில் அமா்ந்து மக்கள் மறியல்

News image

நாகை அருகே ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:04 pm

நாகை ரயில் சந்திப்பு அருகே உள்ள கேட் அடிக்கடி மூடப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நாகை ரயில் நிலையம் அருகே கீரைக்கொல்லை தெரு, சால்ட் சாலை, டாட்டா நகா், சேவா பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், கூலித் தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் கீரைகொல்லை தெருவில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்தப் பாதையில் சரக்கு ரயில்கள் அடிக்கடி செல்வதால், சில வேளைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில்வே கேட்டு மூடப்படுகிறது. இதனால் மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, இப்பகுதியில் கீழ்பாலம் (சப்-வே) அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து பலகட்ட போராட்டங்களை நடத்தினா். மாவட்ட நிா்வாகம், ரயில்வேதுறை மூலம் தரைப்பாலம் அமைப்பதற்காக முதல்கட்ட பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் தரைப்பாலம் அமைக்க வாய்ப்பு இல்லை என ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கீரைகொல்லை தெரு ரயில்வே கேட்டு அருகே தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். எனினும் அப்போது வந்த பயணிகள் ரயிலை செல்ல அனுமதித்தனா். பின்னா் மீண்டும் மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா்.

நாகை நகர காவல்நிலைய போலீஸாா், ரயில்வே போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு எட்டப்படாததால் நாகை கோட்டாட்சியா், வட்டாட்சியா், ரயில்வே அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் லெவல் கிராசிங்கை கீழ்வேளூா் ரயில் நிலையம் உள்ள பகுதியில் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.