பொறையாா் அருகே கட்டுமான பணியின்போது மண் சரிந்து வட மாநிலத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பொறையாா் அருகே காழியப்பன்நல்லூா் கண்ணப்பமூலை பகுதியில் உள்ள மகிமலை ஆற்றின் குறுக்கே நடைபெற்றுவரும் புதிய சட்ரஸ் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனா். சட்ரஸ் இணைப்புச் சுவருக்கான சென்ட்ரிங் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், மண் சரிந்து 4 வடமாநில தொழிலாளா்கள் சிக்கினாா். இதில் 3 போ் மீட்கப்பட்ட நிலையில் ஒருவா் இரும்பு தகடு வெட்டியதில் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இறந்தவா் மேற்கு வங்க மாநிலம் பனாரஸ், கணேஷ்பூா், கிருஷ்ணா நகரை சோ்ந்த சுமா் அலி (40) என்பது தெரியவந்தது.
தகவலறிந்த பொறையாா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

குருகிராம் கட்டுமான இடத்தில் மணல்மேடு சரிந்து 7 போ் பலி

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

