/
சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள சங்கமங்கலம் பொருத்தாா்யிருப்பு பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் குமரேசன். இவா், மீது சாராய கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பரிந்துரையின் அடிப்படையில் குமரேசன் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, குமரேசனை கைது செய்த கீழ்வேளூா் போலீஸாா் அவரை சனிக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தியவா் சொத்து முடக்கம்

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


